இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு; உடனே அப்ளை பண்ணுங்க!



இந்திய ரயில்வே துறையின் கீழ் Isolated Category பிரிவில் மொத்தம் 312 காலியிடங்கள் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

Senior Publicity Inspector பணியிடத்திற்கு மொத்தம் 15 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பதவிக்கு மாத சம்பளம் ரூ.35,400/- ஆகும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Public Relations, Mass Communication, Advertising அல்லது Journalism ஆகிய துறைகளில் டிப்ளமா முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்தவராகவும், அதிகபட்சம் 33 வயதிற்குள் இருப்பவராகவும் இருக்க வேண்டும்.

Lab Assistant Grade III (Chemist & Metallurgist) பணியிடத்திற்கு 39 காலியிடங்கள் உள்ளன. இப்பதவிக்கு மாத சம்பளம் ரூ.35,400/- ஆகும். 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வை Physics மற்றும் Chemistry பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Chief Law Assistant பணியிடத்திற்கு 22 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கான ஆரம்ப சம்பளம் ரூ.19,900/-. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் (LLB) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வழக்கறிஞராக குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் அவசியம். ரயில்வே துறையில் பணிபுரியும் LLB பட்டதாரிகள் குறைந்தது 5 ஆண்டுகள் சேவை அனுபவம் கொண்டிருந்தால் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை.

Junior Translator / Hindi பணியிடத்திற்கு அதிகபட்சமாக 202 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பதவிக்கு மாத சம்பளம் ரூ.35,400/-. ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹிந்தி–ஆங்கில மொழிபெயர்ப்பு அனுபவம் அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமா/சான்றிதழ் அவசியம். வயது வரம்பு 18 முதல் 33 வயது வரை.

Staff and Welfare Inspector பணியிடத்திற்கு 24 காலியிடங்கள் உள்ளன. இப்பதவிக்கு மாத சம்பளம் ரூ.35,400/-. பட்டப்படிப்பு முடித்திருப்பதுடன், Labour Welfare, Labour Laws, Personnel Management, Human Resource Management, MBA (HR) போன்ற துறைகளில் டிப்ளமா அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 38 வயது வரை.

Public Prosecutor பதவிக்கு 7 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பதவிக்கு மாத சம்பளம் ரூ.44,900/-. LLB பட்டத்துடன், வழக்கறிஞராக குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 38 வயது வரை.

Scientific Assistant (Training) பணியிடத்திற்கு 2 காலியிடங்கள் உள்ளன. இப்பதவிக்கு மாத சம்பளம் ரூ.35,400/-. Psychology துறையில் இரண்டாம் வகுப்பு முதுகலைப் பட்டம் மற்றும் குறைந்தது ஒரு ஆண்டு உளவியல் சோதனைகள் நடத்தும் அனுபவம் அவசியம். வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை.

Scientific Supervisor / Ergonomics and Training பதவிக்கு 1 காலியிடம் மட்டுமே உள்ளது. இப்பதவிக்கு மாத சம்பளம் ரூ.44,900/-. Psychology அல்லது Physiology துறையில் முதுகலைப் பட்டம் மற்றும் உளவியல் சோதனை, பயிற்சி திட்டங்கள் அல்லது வேலை உளவியல் ஆராய்ச்சியில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை.

வயது தளர்வு விதிகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், PwBD (Gen/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள், PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள் மற்றும் PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் தொடர்பாக, SC, ST, முன்னாள் படைவீரர்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியோர் (EBC) ஆகியோருக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் Computer Based Test எழுதிய பின் முழு தொகையும் திருப்பி வழங்கப்படும். மற்ற பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். CBT எழுதிய பின் ரூ.400 திருப்பி வழங்கப்படும்.

தேர்வு முறை Computer Based Test (CBT), Performance / Skill / Translation Test, Medical Test மற்றும் Certificate Verification ஆகிய கட்டங்களின் மூலம் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் www.rrbchennai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.01.2026

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

No comments:

Powered by Blogger.